×

நடராஜர் கோயில் கனகசபை முன் மகனுடன் தீட்சிதர் திடீர் போராட்டம் : சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் உள்ள கனகசபைக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய தற்போது தீட்சிதர்கள் தரப்பில் அனுமதி அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இதற்கு சக்தி தீட்சிதர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த விவாகரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகசபைக்கு சென்ற சக்தி கணேஷ் தீட்சிதர், 3 தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். அதே போல் பெண் பக்தர் ஒருவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஐயப்ப தீட்சிதர் என்பவர் கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தீட்சிதர்கள் சக்திகணேச தீட்சிதர், தர்ஷன் தீட்சிதர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

நடராஜர் கோயிலில் எந்தவித தீண்டாமையும் இல்லை. கோயிலுக்கு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வருகிறார்கள். கோயிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்து கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லோரும் கடைபிடித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறுவது தவறானது. பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் கனகசபை மீது யாரும் ஏற வேண்டாம் என கோயிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை’ என்றார்.

இந்நிலையில் நேற்று திடீரென கனகசபை முன்பு, சக்தி கணேஷ் தீட்சிதர், அவரது மகன் தர்ஷன் ஆகியோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனைத்து தரப்பு மக்களையும் கனகசபைக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். தீட்சிதர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் வெளியேற செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

20 தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 13ம் தேதி சாமி கும்பிட சென்ற சிதம்பரம் பழைய புவனகிரி சாலை பகுதியை சேர்ந்த ஜெயஷீலா (37) என்பவரை தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா தொற்று காரணமாக யாரும் கனகசபை மேலே ஏற கூடாது என கூறியதோடு, சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜெயஷீலா புகார் செய்தார். இதையடுத்து, 20 தீட்சிதர்கள் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Dijshidar ,Chidamparam , Natarajar Temple, Kanakasabai, Dixit, struggle
× RELATED விசா முறைகேடு வழக்கு: கார்த்தி...